Management Assistants Vacancies – Department of Examinations

Management Assistants Vacancies - Department of Examinations
Advertisement
Continue Reading Below

Recruitment to Grade III Posts of Management Assistant Technological Segment 3 Service Category – 2019 (2020) Department of Examinations Vacancies 2021

வேலைவாய்ப்பு – முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்பபிரிவு 3 ஆம் சேவை வகுதியின் தரம் III இன் பதவிகளுக்கு ஆட்சேர்த்தல் – 2019 (2020) -இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

பதவி வெற்றிடங்கள் விபரம்

01. Offset Litho Printing Machine Operator
(லிதோ ஓவ்செட் பதிப்பவர் மற்றும் இயந்திர இயக்குநர்)

02. Letterpress Machine Operator
(எழுத்து அச்சக இயந்திர இயக்குநர்)

03. Preprinting Planner
(அச்சுப்பதிப்பு முன் திட்டமிடுபவர்)

04. Computer Typesetter and Printing Designer
(கணினி தட்டச்சு மற்றும் அச்சகக் கோலம்வரைபவர்)

05. Printing Finisher
(அச்சுவேலை முடிப்பவர்)

06. Printing Mechanic
(அச்சக தொழினுட்பவியலாளர்)

தகைமைகள் பின்வருமாறு

GCE (O/L) : சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மொழி, கணிதம் மற்றும் மேலும் இரண்டு (2) பாடங்களுக்கு திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.

கணினி தட்டச்சு மற்றும் அச்சுப்பதிப்பு கோலமிடுபவர் பதவிக்கு மட்டும் மேலே GCE (O/L) இல் உள்ள தகைமைகளுக்கு மேலதிகமாக க.பொ.த (சா.தர) பரீட்சையிலே ஆங்கில மொழிப்பாடத்தில் திறமைச் சித்தியைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.

தொழில் தகைமைகள்

01. அச்சகத் தொழினுட்பவியலாளர் பதவிக்காக,அச்சகத் தொழினுட்பவியலாளர்/மின் தொழினுட்பவியலாளர் துறைக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய தொழில் தகைமை (NVQ) 5 மட்டத்திலான சான்றிதழையோ அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட அதற்குச் சமனாக மேலேயுள்ள பதவிகளுக்கேற்ப பயின்று பெற்றுக் கொண்ட வேறு சான்றிதழ் ஒன்றையோ கொண்டிருத்தல்.

02. ஏனைய சகல பதவிகளுக்கும் அந்தந்த பதவிகளுக்குப் பொருத்தமானதுறைக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய தொழில் தகைமை (NVQ) 5 மட்டத்திலான சான்றிதழ் அல்லது மூன்றாம் நிலை மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதும் அதனை ஒத்த மேற்படி துறைகளுக்கு உரியவாறு பயின்று பெற்றுக் கொண்ட சான்றிதழ்.

03. அச்சுவேலை முடிப்பவர் பதவிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுள் கமராவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட படங்களை அச்சுத்தகடுகளில் பிரதியீடு செய்தல், அச்செடுக்கப்பட்ட அச்சுத் தகடுகளை மேலும் விருத்தி செய்தல் (Develop), கைப்பிரதி அல்லது அச்சுப்பிரதியை அச்சிடுவதற்காக அச்சு எழுத்துக்களை இணைத்தல்(நிறங்களைத் தீர்மானித்தல்) மற்றும் செயல் முறைக் கமராவினை செயற்படுத்துதல் தொடர்பான திறமையைக் காட்டும் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயதெல்லை : 18 வருடங்களுக்கு குறையாமலும் 35 வருடங்களுக்கு மேற்படாமலும் இருத்தல்

தெரிவு செய்யும் முறை : கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை

விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

“Commissioner General of Examinations, Administration Branch, Department of Examinations, Sri Lanka, P.O.Box 1503, Colombo”

விண்ணப்ப முடிவுத்திகதி 2021-01-22 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது

கவனிக்கவும் – இத்துடன் விரிவான விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் மற்றும் உரிய விண்ணப்ப படிவம் இணைக்கப்பட்டுள்ளது

Detailed Gazette Notice and Application Form Attached Below
Gazette Notice – PDF
( அறிவித்தல்)

  English Tamil 
Application Form – PDF
(விண்ணப்ப படிவம்)

Download Application
Closing Date: 2021-01-22
Source : 
Gazette 2020-09-25 (View)
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *