கொரோனாவுக்கு மத்தியில் சூறாவளியால் அல்லலுறும் ஜப்பானும் காட்டுத்தீயால் பற்றி எரியும் அமேரிக்காவும் அதனை எதிர்கொள்ள போராடி வருகிறது.
அண்மையில் ஜப்பானை தாக்கிய “மாய்சக்” புயல் இந்த ஆண்டின் கடுமையான புயலாக கருதப்படும் அதே வேளை “ஹாஷென்” சூறாவளி ஜப்பானை மீண்டும் தாக்குகிறது. நூற்றுக்கணக்கான ரயில்கள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 8 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு நகருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மறுபுறம் அமேரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான நீர்த்தேக்கம் அருகே உள்ள கழிமுக பகுதியில் வேகமாக காட்டுத்தீ பரவி வருகிறது. இது வரை உயிர்சேதங்கள் ஏற்படாத போதும் 20 பேர் காயமடைந்துள்ளனர். ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலிருந்து கலிபோர்னியாவில் குறைந்தது 1000 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது