சவால்களுக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகள் இம்முறை UAE இல் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது

Advertisement
Continue Reading Below

Covid-19 தொற்று காரணமாக இந்த வருடம் தள்ளிவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகும் என  இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி உட்பட எட்டு அணிகளும் கடந்த மாதம் துபாயை சென்றடைந்தன. கடந்த ஒரு வாரமாக அனைத்து அணி வீரர்களும் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செப்டம்பர் 19 ஆம் திகதி நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

IPL 2020 Schedule

46 போட்டிகளை கொண்ட லீக் சுற்றின் கடைசி போட்டி நவம்பர் 3 ஆம் திகதி ஷர்ஜாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் போட்டிகள் அனைத்தும் அபுதாபி, ஷர்ஜா, துபாய் உள்ளிட்ட மூன்று இடங்களிலும் பகல் நேர போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கும், மாலை நேர போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி , 7.30 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் மீண்டும் இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *