Advertisement
Continue Reading Below
அண்மையில் ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கையரான யுபுன் அபேய்கோண் தெற்காசியாவின் வேகமான மனிதன் எனும் பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார்.
நேற்று ஜேர்மனியில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 விநாடிகளில் தமது இலக்கை பூர்த்தி செய்து சாதனைப்படைத்துள்ளார். இலங்கையின் வேகமான மனிதர் என்பதையும் தாண்டி தெற்காசியாவின் வேகமான மனிதர் என தடம் பதித்துள்ளார். இதற்கு முன்னர் இமாஷ இஷான் இந்த சாதனையை புரிந்துள்ளார். அவர் 10.22 விநாடிகளில் போட்டியை முடித்துள்ளார். யுபுன் அபேகோண் நேற்று புரிந்த சாதனையை தொடர்ந்து அவர் தெற்காசியாவின் வேகமான மனிதராக மாறியுள்ளார்.
Advertisement