இலங்கை பாராளுமன்றத்துக்கு 142,037 வாக்குகளுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் தெரிவான மரண தண்டனை கைதிக்கு நீதிமன்றத்தின் மூலம் அனிமதியளித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது இரத்தினபுரி – கஹவத்தை வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த துடன் இச் சம்பவத்தில் பிரேமலால் ஜயசேகர தொடர்புபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு அவர் மீதான நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு வந்து அவருக்கு நீதிமன்றம் மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்கும் போது அவர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளராக தனதுபெயரை பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட்டு இறுதியில் அமோக வெற்றியும் பெற்று தற்பொழுது சிறையில் இருந்து பாராளுமன்றம் செல்ல விசேட அனுமதியும் பெற்றுள்ளார்.