கடந்த ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி, அதாவது லெபனான் உருவாக்கப்பட்டு நூற்றாண்டை அடையும் நிலையில் கரைபடிந்த ஒரு நாளாக மாறியது இந்நாள். லெபனானின் பெரூட் நகரில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவமே இதற்கு காரணமாகும். ஒரு மாதம் கடந்த நிலையிலும் இன்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி மனித உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. மோப்ப நாய் கொடுத்த சமிக்ஞையின் பிரகாரம் தற்பொழுது மீண்டும் இடிபாடுகளுக்குள் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
190ற்கும் மேற்பட்ட மரணங்களும் 6500ற்கும் மேற்பட்டோர் காயங்களுக்கும் உள்ளாகிய இச்சம்பவம் தொடர்பில் டசின் கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்களுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். எது எவ்வாறிருப்பினும், குறித்த பகுதியில் ஏற்பட்ட வெடிப்புக்கு துறைமுக அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும் என லெபனான் அரசாங்கம் கூறியுள்ளது. குறித்த அமோனியம் நெட்ரேட் இரசாயணத்தை அங்கிருந்து அகற்றுமாறு அறிவித்தபோதும் அது இடம்பெறவில்லையென அந்நாட்டு சுங்க பிரிவு பிரதாணி குறிப்பிட்டுள்ளார். விவசாயத்துக்கான உரமாகவும் வெடிபொருளாகவும் அமோனியம் நெட்ரேட் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பித்தக்கது.