2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் பணிகள் ஜனவரி 20 ஆம் திகதி மும்மொழிகளிலுமான செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பதாரிகள் கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலகத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் இருந்து அரச அல்லது தனியார் துறையில் வேலையில் ஈடுபடாத குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
6 மாத பயிற்சியும் பயிற்சிக்கால கொடுப்பனவாக 22500 ரூபாவும் 6 மாத கால வெற்றிகர பயிற்சியின் பின்னர் PL-01 தரத்தின் கீழ் நிரந்தர அரச நியமனமும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 34,818 பேருக்கு ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும் இப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு NVQ 3 தரச் சான்றிதழ் வழங்கப்படும். தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரிகள் அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவர்