Advertisement
Continue Reading Below
2020 ஆம் ஆண்டிற்கான சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.
இவ்வருடம் 621,000 மாணவ, மாணவிகள் பரீட்சைக்கு விண்ணப்பித்து தகைமைபெற்றுள்ளனர்.
அதே நேரம் நடைபெற்று முடிந்த GCE A/L பரீட்சையின் பெறுபேறுகளை நான்கு மாதங்களுக்குள் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் சனத் பூஜித அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதன்படி 2021 மார்ச் மாதம் அளவில் பெறுபேறுகளை வெளியிட உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Advertisement