Advertisement
Continue Reading Below
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற உயர்தர பரீட்சை 2020 இன்றுடன் வெற்றிகரமாக நிறைவடைகிறது. ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகி தொடர்ந்து 22 நாட்கள் பரீட்சை நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் , மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு முகம் கொடுத்தனர்.
இது பற்றி கருத்துத் தெரிவித்துள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் புஜித அவர்கள் பரீட்சை மிகவும் வெற்றிகரமான முறையில் நடத்திமுடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கொடிய தொற்றின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பரீட்சையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு நல்கிய சகல தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Advertisement