பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் நிகழ்சித்திட்டதில் அனைத்து வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளும் இறுதியாக வெளிவந்த தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் பெயர்பட்டியலில் நிராகரிக்கப்பட்டிருந்தனர். நிராகரிப்பிற்கான காரணம் வெளிநாட்டு பட்டம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களது நிராகரிப்பிற்கு எந்தவொரு நியாயமான காரணத்தையும் அரசு சொல்லவில்லை. அதனை தொடர்ந்து நிராகரிப்பிற்கு உள்ளான வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் பல ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இது இவ்வாறு இருக்க தற்பொழுது வெளிவந்துள்ள செய்தியின் பிரகாரம் அரசாங்கம் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளையும் இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளது. இந்த உத்தரவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களே பிறப்பித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்காலத்தில் அவர்களுக்கான நேர்முகத் தேர்வுகளை வைத்து இலங்கையின் பின் தங்கிய பிரதேசங்களில் ஆங்கிலம், தகவல் தொழில்னுட்பம் போன்ற பாடங்களை கற்பிக்க உள்ளீர்ப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது திறமைக்கு இசைவான ஏனைய அரச நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளவதாகவும் தெரிவித்துள்ளது.