Plantation Community Communication Facilitator Vacancies

Plantation Community Communication Facilitator Vacancies
Advertisement
Continue Reading Below

Plantation Community Communication Facilitator (PCCF) | State Ministry of Estate Housing and Community Infrastructure 2021

அரச வேலைவாய்ப்பு | தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு 2021

பதவி : பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் உத்தியோகத்தர்

தேவையான தகைமைகள் :

01. சிங்களம்/ தமிழ்/ஆங்கிலம், கணித பாடங்களுடன் மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல்

02. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர) பரீட்சையில் இரண்டாம் மொழியில் சாதாரண சித்தியடைந்திருத்தல்.( சிங்கள மொழியில் திறமைச் சித்தி பெற்றுள்ளவர்கள் தமிழ் மொழியில் சாதாரண சித்தியும் தமிழ் மொழியில் திறமைச் சித்தி பெற்றுள்ளவர்கள் சிங்கள மொழியில் சாதாரண சித்தியும் பெற்றிருத்தல் என்பதாக)

03. கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர் தர) பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்தில் (01) (சாதாரண பொதுப் பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்திருத்தல்

04. விண்ணப்பப் படிவம் பாரமேற்கப்படும் இறுதித் திகதியில் 18 வயதுக்கு குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

05. பின்வரும் மாவட்டங்களுக்குரிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

பிரதேச செயலாளர் பிரிவின் பட்டியல்

இரத்தினபுரி – அயகம,பலாங்கொட,அலபான, கொடகவெல‚இம்புல்பே,கலவான,கொலொன்ன, குருவிட்ட, நிவித்திகல‚ஒபநாயக,பெல்மடுல்ல,இரத்தினபுரி

மொனராகலை – மொனராகல, வெல்லவாய

மாத்தறை – கொட்டபொல, பிட்டபெத்தற

நுவரெலியா – அம்பகமுவ,ஹங்குரன்கெத்த.கொத்மலே, நுவரெலிய‚ வலப்பன

களுத்தறை – புலத்சிங்கள,தொடங்கொட,இங்கிரிய,மதுராவல, மத்துகம, பாலிந்தநுவர

கண்டி– அக்குறண,தெல்தொட்ட, தொழுவ, கங்ககலகோறள, கங்கவட்டகோறள, ஹத்தரலியத்த, குண்டகசாலை, மெததும்பர, பன்வில, பஸ்வாகேகோறள, பாததும்பற, உடபளாத்த

காலி – நாகொட, தவளம

மாத்தளை – அம்பன்கஹகோறள‚ மாதலே‚ ரத்தொட்ட‚ உக்குவெல யட்டவத்த

பதுளை– பதுளை,பண்டாரவெல, அல்ல, ஹல்துமுல்ல, ஹாலிஎல ஹப்புத்தள, லுணுகல, மீகஹகிவுல, பசறை, சொரணாதொட்ட, ஊவாபரணகம, வெலிமட

கேகாலை – புலத்கொஹுபிட்டிய,தெஹிஓவிட்ட,தெரணியகல, றுவன்வெல்ல, யட்டியன்தொட்ட

ஆட்சேர்ப்புச் செய்யும் முறை – தகைமை மதிப்பீடு நேர்முகப்பரீட்சை மூலம்

விண்ணப்பிக்கும் முறை – இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் “செயலாளர், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு இலக்கம் 45, புனித மைக்கல் வீதி, கொழும்பு 03”. எனும் முகவரிக்கு 2021.01.22 திகதிக்கு முன்னதாக பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

(விண்ணப்பப் படிவம் அனுப்பப்படுகின்ற கடித உறையில் இடது பக்க மேல் மூலையில் “பெருந்தோட்ட சமூக தொடர்பாடல் வசதியளிப்பாளர் உத்தியோகத்தர் பதவி ” எனக் குறிப்பிட வேண்டும்).

முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள கட்டாயம் அறிவித்தலை வாசிக்கவும்…!!!!

விரிவான விபரம் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது
(Detailed Notice and Application Form Attached Below)
Notice
( அறிவித்தல்)

 Tamil | Sinhala
Application Form
(விண்ணப்ப படிவம்)

 Tamil | Sinhala
Closing Date: 2021-01-22
Source : 
Sunday Observer (2021-01-10)
Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *