Application Calling : Aptitude Test for University Admission 2020/2021
விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது, விபரங்களுக்கு – இங்கே அழுத்தவும்
Closing Date : 2021-06-11
Ramanathan Academy of Fine Arts, University of Jaffna.
Course Details
- Bachelor of Fine Arts (Honors) in Music
- Bachelor of Fine Arts (Honors) in Bharathanatiyam
- Bachelor of Fine Arts (Honors) in Art & Design
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை,
இராமநாதன் நுண்கலைக்கழகம்,
பல்கலைக்கழக அனுமதி–2020/2021
01. நுண்கலைமாணி– கர்நாடகசங்கீதம்
02. நுண்கலைமாணி– நடனம்
03. நுண்கலைமாணி- சித்திரமும் வடிவமைப்பும்
மேற்படி நான்கு வருட பட்டப் படிப்புக் கற்கைநெறிகளுக்கு அனுமதி பெற விரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து 11.06.2021 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும்
அனுமதிக்கான தகைமைகள்
கர்நாடகசங்கீதம், நடனம், சித்திரமும் வடிவமைப்பும் கற்கை நெறிகளில் யாதேனுமொன்றைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ.த) பரீட்சையில் சித்தியடைந்து இருப்பதுடன் தெரிவு செய்ய விரும்பும் பாடநெறிக்குரிய பாடத்தில் அதாவது கர்நாடகசங்கீதம் அல்லது நடனம்-பரதம் அல்லது சித்திரக்கலையில் ஆகக் குறைந்தது திறமைச் சித்தியும் (C), மற்றைய இரண்டு பாடங்களிலும் ஆகக் குறைந்தது சாதரண தரச் சித்தியும் (S) பெற்றிருப்பதுடன் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையை பெற்றிருத்தல் வேண்டும்.
தகுதிகாண் பரீட்சை ஆற்றுகை/ உளச்சார்பு பரீட்சை
மேற்குறித்த கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் ஆற்றுகைப் பரீட்சை உளச்சார்பு பரீட்சைக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தோற்றுதல் வேண்டும்.
கர்நாடகசங்கீதம்/ நடனம்- பரதம் – ஆற்றுகை பரீட்சை
சித்திரமும் வடிவமைப்பும் – செய்முறை மற்றும் எழுத்துப் பரீட்சை
விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்
Online Application – Apply Now
விண்ணப்பதாரிகள் மேலுள்ள இணைப்பினூடாக விண்ணப்பங்களை நிகழ்நிலையாக (online) 28.05.2021 ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ.த) பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியும், பரீட்சைக் கட்டணத்தினை மேற்கொண்ட பற்றுச் சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்துக் கொள்ளுதல் அவசியமானது.
பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கையெழுத்திட்டு க.பொ.த உயர்தர பெறுபேற்று பத்திரத்தின் பிரதி மற்றும் கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்து உதவிப்பதிவாளர், அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் கற்கை நெறியைக் குறிப்பிட்டு பதிவுத்தபால் மூலம் அல்லது நேரில் சமர்ப்பித்தல் வேண்டும்.
நுழைவு அனுமதித் தகைமையைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு ஆற்றுகை/ நேர்முகப் பரீட்சைக்குரிய அனுமதி அட்டை அவர்களினால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
கட்டணவிபரம்
இல | கற்கைநெறி | மக்கள் வங்கிக் கணக்கிலக்கம் | விண்ணப்பக் கட்டணம் |
1 | கர்நாடகசங்கீதம் | 040002400001622 | 500.00 |
2 | நடனம்- பரதம் | 040002400001630 | 500.00 |
3 | சித்திரமும் வடிவமைப்பும் | 040002400001648 | 1,300.00 |
மேற்படி தகுதிகாண் பரீட்சைக்கான கட்டணத்தினை ஏதாவது ஒரு மக்கள் வங்கிக் கிளையில், மேற்குறிப்பிட்டவாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளை கணக்கு இலக்கத்திற்கு செலுத்தி இருத்தல் வேண்டும்.
அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமையை கொண்டிராததும், பணம் செலுத்திய பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படாததும், பெறுபேற்று பத்திரங்களின் உறுதி செய்யப்பட்ட போட்டோ பிரதிகள் இணைக்கப்படாததுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொலைபேசி எண்- 021 222 6714, மின்னஞ்சல் முகவரி- [email protected] மூலம் தொடர்பு கொள்ள முடியும்.
பதிவாளர்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
Source : View Web Page