University of Jaffna Aptitude Test 2021 (Translation Studies )

University of Jaffna Aptitude Test 2021 for Translation Studies
Advertisement
Continue Reading Below

Application Calling for Aptitude Test – University Admission 2020/2021

விண்ணப்ப முடிவுத்திகதி அறிவிக்கப்பட்டுள்ளது, விபரங்களுக்கு – இங்கே அழுத்தவும்

Closing Date : 2021-06-11

University of Jaffna, Sri Lanka

Course Details :

  • Bachelor of Arts in Translation Studies

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
பல்கலைக்கழக அனுமதி 2020/2021
உளச்சார்புப் பரீட்சை (Aptitude Test)

மொழிபெயர்ப்பில் கலைமாணி கற்கைநெறி (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

மேற்படி நான்கு வருட பட்டப் படிப்புக் கற்கைநெறிக்கு அனுமதி பெறவிரும்பும் தகுதியான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் 11.06.2021 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அனுமதிக்கான பொது நிபந்தனைகளும் தகைமைகளும்

மொழிபெயர்ப்பில் கலைமாணி கற்கைநெறியைத் தெரிவு செய்வதற்கு விரும்பும் விண்ணப்பதாரிகள் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் ஆகக் குறைந்தது 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பதுடன் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.

உளச்சார்புப்பரீட்சை

மேற்குறித்த கற்கைநெறி அனுமதிக்கான விண்ணப்பதாரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலமொழித் திறமையைப் பரீட்சிப்பதற்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பரீட்சைக்கு தோற்றுதல் வேண்டும். பரீட்சைகள் தமிழ், ஆங்கில மொழிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்படும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்

 Online Application – Apply Now

விண்ணப்பதாரிகள் மேலுள்ள இணைப்பினூடாக தத்தமது விண்ணப்பங்களை நிகழ்நிலையாக (Online04.06.2021 ஆம் திகதி பி.ப 2.00 மணிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். பாடசாலை அதிபர் அல்லது சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்ட க.பொ.த (உ/த) 2020 பெறுபேற்றுப் பத்திரத்தினது போட்டோப் பிரதியும்  கட்டணம் செலுத்தப்பட்ட பற்றுச் சீட்டினையும் விண்ணப்பத்துடன் இணைத்துக் கொள்ளுதல் அவசியமானது.

விண்ணப்பித்த பிரதிகளை பதிவிறக்கம் செய்து அதில் கையெழுத்திட்டு க.பொ.த (உ/த) பெறுபேற்றுப் பத்திரப் பிரதி மற்றும் கட்டணம் செலுத்திய பற்றுச் சீட்டினையும் இணைத்து உதவிப் பதிவாளர், அனுமதிகள் கிளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘மொழிபெயர்ப்புக் கற்கைநெறி 2020/ 2021′ எனக் குறிப்பிட்டு பதிவுத் தபால் மூலமோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பித்தல் வேண்டும்.

பிரவேச அனுமதித் தகைமையைப் பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு பரீட்சைக்குரிய அனுமதி அட்டை அவர்களினால் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

கட்டணவிபரம்

மேற்படி தகுதிகாண் பரீட்சைக்கான விண்ணப்பக் கட்டணம் ரூபா 500.00 ஐ ஏதாவதொரு மக்கள் வங்கிக் கிளையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளை, கணக்கு இலக்கம் 040002400001655 இற்கு செலுத்தி இருத்தல் வேண்டும்.

அனுமதிக்குரிய ஆகக்குறைந்த தகைமையை கொண்டிராததும், பணம் செலுத்திய பற்றுச் சீட்டு சமர்ப்பிக்கப்படாததும், பெறுபேற்றுப் பத்திரத்தின் உறுதி செய்யப்பட்ட போட்டோப் பிரதிகள் இணைக்கப்படாததுமான விண்ணப்பங்கள் யாவும் நிராகரிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு தொலைபேசி எண்- 021 222 6714, மின்னஞ்சல் முகவரி- [email protected] மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

பதிவாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Advertisement