அரச பதவி வெற்றிடங்கள் | 2020/10/02 அன்றைய வர்த்தமானியில் வெளிவந்தது.
நிலைபேறான நகர குடியிருப்பு அபிவிருத்தியொன்று உருவாகுவதனை உறுதிப்படுத்தும் பொருட்டு தற்போது நடைமுறையிலுள்ள வீடமைப்பு அலகுகளை மேம்படுத்துவதன் ஊடாகவோ அல்லது மிகச் சிறந்த வீடமைப்பு வசதிகள் மற்றும் குறைந்த நகர வசதிகளின் பொருட்டான பிரவேசத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதன் ஊடாக சேவை வசதிகள் குறைந்த நகர குடியிருப்புக்களில் வாழ்வோர்களின் வாழ்க்கைத் தரத்தினை கட்டியெழுப்புவது நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய குறிக்கோளாகும்.
இக் குறிக்கோள்களை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு மனித குடியிருப்பு அபிவிருத்தித் துறையின்
தொழில் வான்மையாளர்களின் பங்களிப்புக்கள் தேவை என்பதனால் கீழ்க் குறிப்பிடப்படும் வெற்றிடமாகவுள்ள பதவிகளின் பொருட்டு நிரந்தர அடிப்படையில் ஆட்சேர்த்துக் கொள்வதற்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பப்படிவங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பம் கோரப்பட்டுள்ள வெற்றிடமாக உள்ள பல்வேறு பதவிகளின் விபரம் பின்வருமாறு
உதவிப் பணிப்பாளர் (சமூகவலுவூட்டல்),
தொழில்நுட்ப உத்தியோகத்தர்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்,
தரவுத் திட்ட உதவியாளர்,
சமுதாய அபிவிருத்தி உதவியாளர்,
தொழில்நுட்ப உதவியாளர்,
முகாமைத்துவ உதவியாளர்,
சமூக அபிவிருத்தி உதவியாளர்,
அலுவலக பணி உதவியாளர்,
சுவடிகள் பொறுப்பாளர்
மேல் குறிப்பிடப்பட்ட பதவிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை ஆகவே அவற்றுக்கான கல்வித்தகைமையும் ஒன்றுக்கொன்று வித்தயாசப்படும். அவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பதிவிறக்கம் செய்து தெளிவாக வாசித்துக்கொள்ள முடியும்.
விண்ணப்பிக்கும் முறை : வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உரிய தமைமை உடையவர்கள் தமது சகல சுய விபரத் தகவல்களும் அடங்கிய விண்ணப்பப் படிவங்களை தயாரித்து தமது தகைமையை உறுதிப்படுத்தக்கூடிய உரிய சான்றிதழ்களின் பிரதிகளுடன் உறவினரல்லாத இருவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கங்களுடன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவிரிக்கு 2020.10.16 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிப்பிக்கின்ற பதவியினை கடித உறையின் இடது பக்கமேல் மூலையில் குறிப்பிட்டு பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகார சபை
09 ஆவது மாடி
செத்சிறிபாய, பத்தரமுல்லை
தொலைபேசி 011-288772
மின்னஞ்சல் – [email protected]
Closing Date: 2020/10/16
Click Below to Download the Advertisement(Gazette Notice)
Download Gazette Notice in English
Download Gazette Notice in Tamil
Download Gazette Notice in Sinhala
Important Notice : அன்பான வேண்டுகோள். புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது தளமானது வாசகர்களுக்கு பல அரிய சேவைகளை வழங்க காத்திருக்கிறது. நீங்களும் எமக்கு ஆதரவளிக்க நினைத்தால் எமது தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பெறுமதியான பதிவுகளை தவறாது சமூக வலைதளங்களில் Share செய்யவும், உமது நண்பர்களுடன் மற்றும் நீங்கள் அங்கத்தவராக இருக்கும் வட்சப் குழுமங்களில் பகிர்ந்து எமக்கு ஆதரவளிக்கும் படி தாழ்மையுடன் வேண்டுகிறோம்.