Recruitment to Carpentry and Textile Industry Consultant Grade III (Open) – 2021 for Department of Industrial Development, North Central Provincial Council
வடமத்திய மாகாண சபையின் கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் தச்சுக் கைத்தொழில் மற்றும் புடைவைக் கைத்தொழில் போதனாசிரியர் III ஆந் தரத்திற்கு ஆட்சேர்த்தல் (திறந்த நிலை) – 2021
தேவையான தகைமைகள்
GCE O/L – இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் மொழி மற்றும் கணிதம் உட்பட மூன்று திறமைச் சித்திகள் சகிதம் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்
தொழில்சார் தகைமை
பின்வரும் வகையில் பதவிக்கு இயைபான தொழில்சார் தகைமையைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
தச்சுக் கைத்தொழில் போதனாசிரியர் – கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் இயந்திர தச்சுப் பயிற்சி நிறுவனமொன்றில் ஒரு வருட தச்சுக் கைத்தொழில் கற்கை நெறியைக் கற்று அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்து இறுதி சான்றிதழைப் பெற்றிருத்தல் மற்றும் ஒரு வருட தச்சுக் கைத்தொழில் உயர் கற்கை நெறியொன்றைக் கற்று அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்து சான்றிதழைப் பெற்றிருத்தல்.
புடைவைக் கைத்தொழில் போதனாசிரியர் – அரச அழகியற்கலை நிறுவனத்தில் உயர் கற்கை நெறி அல்லது மூன்று வருட சான்றிதழ் அல்லது கைத்தொழில் திணைக்களத்தினால் வழங்கப்படும் மூன்று வருட மூன்று வருட சான்றிதழ் அல்லது இரண்டு வருட சான்றிதழ் அல்லது கைத்தொழில் இறுதி சான்றுப்பத்திர கற்கை சான்றிதழை (13 மாதங்கள்) பெற்றிருத்தல்
வயதெல்லை : 18-35
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
“Secretary, North Central Provincial Public Service Commission, District Secretariat Complex, Anuradhapura”
Download Gazette Notice Tamil | Sinhala |
Download Application Form Tamil | Sinhala |
Closing Date : 2021-04-05 |