Open Competitive Examination for Recruitment to the posts of Social Service Officers Grade II in the Eastern Province 2021
கிழக்கு மாகாண பொதுச் சேவையின் சமூகசேவை உத்தியோகத்தர் தரம் II இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021
கல்வித் தகைமைகள் :
01. Degree : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து சமூகவியல் அல்லது உளவியல் அல்லது சமூக சேவை ஆகிய துறைகளில் பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும்.
(அத்துடன்)
02. GCE A/L : கல்விப் பொதுத்தராதர (உ/த) பரீட்சையில் (சாதாரண பொதுப்பரீட்சை தவிர்ந்த) அனைத்துப் பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே அமர்வில் மூன்று (03) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் போதுமானது.)
வயதெல்லை : 2021.01.26ஆந் திகதியன்று 21 வயதுக்குக் குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விரிவான அறிவித்தல் மற்றும் விண்ணப்ப படிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது (Detailed Notice and Application Form Attached Below) |
Download Notice (விரிவான அறிவித்தல்) Tamil | Sinhala |
Application Form (விண்ணப்ப படிவம்) Tamil | Sinhala |
Closing Date: 2021-01-26 |
Website Link |
Source : தினகரன்(2021-01-06) |
விண்ணப்பிக்கும் முறை :
முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2021.01.26 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னதாக கிடைக்கக்கூடியவாறு பதிவுத் தபாலில் கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். விண்ணப்ப இறுதித்திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்புகின்ற கடித உறையின் இடது பக்கமேல் மூலையில் பரீட்சைக் குறியீட்டு இலக்கம் EX/Rec/21/01 என்பதை குறிப்பிடுவதோடு “சமூக சேவை உத்தியோகத்தர் தரம் II பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை – 2021” என குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.
விண்ணப்ப படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
“செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம்,
198, உட்துறைமுக வீதி, திருகோணமலை”