News: Eastern Province Teaching Vacancies to be filled soon

Eastern Province Teaching News
Advertisement
Continue Reading Below

செய்தி – தினகரன் பத்திரிகை (2021-04-23)

கிழக்கு மாகாணத்தில் 701 ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவ் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தான் எடுத்துவருவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எம்.சி.எல்.பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கவ்விச் செயற்பாடுகள் உறுதியாக இருக்கின்றது. ஆயினும் ஆசிரியர்களின் வெற்றிடங்கள் இல்லாமலில்லை. குறிப்பாக தூயகணிதம், கணனித் தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்களின் வெற்றிடங்கள் இருந்து வருகின்றன.

தமிழ் மொழி மூலமான ஆசிரியர்கள் 443 பேர் நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது. தூயகணித பாடத்திற்கு 293 பேரும், கணனித் தொழில் நுட்பத்திற்கு 98 பேரும், விஞ்ஞானத்திற்கு 52 பேரும் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

View this also :
Applications Calling : Recruitment of Retired Teachers on Contract Basis (Eastern Province)

அதேபோன்று சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் 258 பேர் நியமிக்கப்பட வேண்டியிருக்கிறது. தூயகணித பாடத்திற்கு 102 பேரும், கணனித் தொழில்நுட்பத்திற்கு 90 பேரும், விஞ்ஞான பாடத்திற்கு 66 பேரும் என வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பாடத்தையும் போதிப்பதற்கு அப் பாடத்தில் சிறப்புத் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களே நியமிக்கப்பட வேண்டும் என்ற நியதியை கல்வித் திணைக்களம் கடைப்பிடித்து வருகிறது.

அவ்வாறான ஆசிரியர்களை நியமிக்காமல் நாம் கிழக்கு மாகாண பாடசாலைகளின் கல்வித் தரத்தை ஒரு சிறப்பான நிலைக்கு உயர்த்த முடியாது. இதனை எமது மாகாண ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றார்.

Advertisement