ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான பொது அறிவு

ஒலிம்பிக் போட்டிகள் பொது அறிவு
Advertisement
Continue Reading Below

உலகில் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கி சுமார் 205 நாடுகள் பங்கேற்கும் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பழமையும் பிரபலமும், மதிப்பும் மிக்க ஓர் விளையாட்டுப் போட்டி இதுவாகும். உலகிற்கு ஒலிம்பிக் போட்டிகளை அறிமுகப்படுத்திய பெருமை கிறீஸ் நாட்டையே சாரும். ஆயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்கும் இப் போட்டிகள் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே (கி.மு 776) கிரேக்கத்தின் கிறீஸ் ஒலிம்பியா பள்ளத்தாக்கில் பாரம்பரியமாக கி.மு 8 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 5 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விளையாடப்பட்டு வந்தன. பின்னர் பிரான்ஸ் நாட்டு பிரபுவான பியர் தெ குபர்த்தென்(Pierre de Coubertin) பிரபுவால் 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடாத்தும் வழக்கம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இவரே 1894 ல் அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கிய பெருமைக்குரியவராவார். தற்கால ஒலிம்பிக் போட்டிகளின் தந்தை எனவும் இவர் கெளரவிக்கப்படுகிறார்.

1894 இல் ஒலிம்பிக் நடாத்துவதற்கான சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம்
(International Olympic Committee – IOC) அமைக்கப்பட்டது.

நவீன ஒலிம்பிக் போட்டிகள்:

கி.பி 1894 இல் ஒலிம்பிக்கில் மறுமலர்ச்சியை தோற்றுவித்து நவீன ஒலிம்பிக்கின் தந்தையாக போற்றப்படுபவர் பியர் தெ குபர்த்தென் (Pierre de Coubertin) ஆவார். 1908 ல் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்குபெற அனுமதியளிக்கப்பட்டது. இதேவேளை 1920 இல் பியர் தெ குபர்த்தென் இனால் ஒலிம்பிக் கொடி வடிவமைக்கப்பட்டு ஒலிம்பிக் கொடியேற்றும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

ஒலிம்பிக் கொடி
ஒலிம்பிக் கொடி

இந்த ஐந்து ஒலிம்பிக் வளையங்களும் 1913 ல் வடிவமைக்கப்பட்டு 1914 ல் அங்கீகரிக்கப்பட்டு, 1920 இல் கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன. இக் கொடியில் இடம்பெறும் ஐந்து நிற வளையங்களும் ஐந்து கண்டங்களை பிரதிபலிக்கிறது. ஐந்து கண்டங்களும் ஒற்றுமையாக பங்கேற்க வேண்டுமென்பதனையே இது குறிக்கிறது

நீலம் – ஐரோப்பா
மஞ்சள் – ஆசியா
கறுப்பு – ஆபிரிக்கா
பச்சை – அவுஸ்திரேலியா
சிவப்பு – அமெரிக்கா

ஒலிம்பிக் தொடர்பான முக்கிய பொது அறிவுத்துளிகள்:

  • ஒலிம்பிக் தாரக மந்திரம் – Faster, Higher, Stronger (விரைவு, உயர்வு, துணிவு)
  • ஒலிம்பிக்கின் குறிக்கோள் – போட்டிகளில் வெற்றி பெறுவதல்ல பங்கேற்பது தான் முக்கியம் அதாவது போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமென்பது நோக்கமல்ல பங்கேற்று சிறப்பாக செயற்பட வேண்டும் என்பதாகும்
  • குறித்த போட்டிக்கான ஒலிம்பிக் சின்னம் ஒலிம்பிக் போட்டிகளை நடாத்தும் நகரைப் பொறுத்து தெரிவு செய்யப்படுகிறது.
  • ஒலிம்பியாட் – ஒரு ஒலிம்பிக் போட்டி தொடங்கிய ஆண்டிலிருந்து அடுத்த ஒலிம்பிக் போட்டி தொடங்கும் ஆண்டு வரையிலான நான்கு வருட காலப்பகுதியை குறிக்கும்
  • அதிகளவு தடவைகள் ஒலிம்பிக் போட்டியை நடாத்திய நாடு – அமேரிக்கா
  • முதன் முதலில் பெண்களுக்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெற அனுமதியளிக்கப்பட்டது – 1900, அதேவேளை பெண்கள் முதன் முதலில் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகள் – 1908 லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் ஆகும்
  • முதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகிய ஆண்டு – 1924
  • ஒலிம்பிக் கிராமம் அமைக்கும் முறை ஆரம்பிக்கப்பட்ட ஒலிம்பிக் – 1932 லொஸ் ஏஞ்சல்ஸ்
  • 1936 இல் ஒலிம்பிக்கை முதன் முதலில் ஒளிபரப்பிய தொலைக்காட்சி – Telefunken and Fernesh(ஜேர்மனி)
  • ஒலிம்பிக் தீபமேற்றும் வழக்கம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு – 1936, இவ் ஒலிம்பிக் தீபம் ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கும் பல மாதங்களுக்கு முன்பே கிரீக் நாட்டில் ஒலிம்பியாவில் இந்த தீபம் ஏற்றப்பட்டு பல நாடுகளின் பல வீரர்களால் ஏந்திச் செல்லப்பட்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கும் நாளன்று ஒலிம்பிக் நடைபெறும் மைய அரங்கத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
  • உலகப் போரின் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாத ஆண்டுகள் – 1916,1940,1944
  • இலங்கைக்கு முதன் முதலில் ஒலிம்பிக் பதக்கத்தை வென்றவர் – டங்கன் உவைட் (1948 இல் லண்டன் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி வெள்ளிப் பதக்கம் வென்றார்)
  • இலங்கை குறுந்தூர ஓட்ட வீராங்கனையான சுசந்திகா ஜயசிங்க 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்ற ஆண்டு – 2000
  • 2 ஆம் உலக மகாயுத்த த்தில் ஊனமடைந்த வீர ர்களுக்கான பரா ஒலிம்பிக் போட்டிகள் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது – 1960
  • முதல் ஒலிம்பிக் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ( Olympic Mascot ) – 1968. இது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடுகளின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை குறிக்கும் விதமாக மனிதரோ அல்லது விலங்கோ சின்னமாக பயன்படும்.
  • ஒலிம்பிக் நூற்றாண்டு விழா போட்டிகள் நடைபெற்ற ஆண்டு – 1996
  • பெண் வீராங்கனை ஒருவரால் ஒலிம்பிக் தீபம் நீருக்கு அடியில் கொண்டு செல்லப்பட்டு ஏற்றப்பட்ட ஆண்டு – 2000
  • ஒலிம்பிக் பிறந்த இடமான எதென்ஸில் மீண்டும் எத்தனையாம் ஆண்டு ஒலிம்பிக் போட்டுகள் இடம்பெற்றன – 2004
  • இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 2010
  • முதல் குளிர்கால இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 2012
  • ஒலிம்பிக் அமைப்பினால் நடாத்தப்படும் விழாக்கள் :
    • பண்டைக்கால ஒலிம்பிக்
    • கோடைக்கால ஒலிம்பிக்
    • குளிர்கால ஒலிம்பிக்
    • பரா ஒலிம்பிக்
    • இளையோர் ஒலிம்பிக்

2020 ஒலிம்பிக் போட்டிகள்

2020 ஜூலை 23 தொடக்கம் ஆகஸ்ட் 8 வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உத்தேசிக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகையே அச்சுறுத்தும் கோவிட் 19 காரணமாக 2021 இற்கு பிற்போடப்பட்டுள்ளது. இப் போட்டிகள் டோக்கியோவில் உள்ள புதிய தேசிய விளையாட்டரங்கில் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்த அதேவேளை 33 விளையாட்டுக்களில் இருந்து 339 விளையாட்டுப் போட்டிகளும் 11091 போட்டியாளர்களும் 206 நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது

2020 ஒலிம்பிக்கில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள அதேவேளை புதிதாக 5 விளையாட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படவிருந்தன அவை

  • பேஸ்பால் /சாப்ட்பால்
  • மலையேற்றம்
  • அலைச்சறுக்குதல்
  • கராத்தே
  • ஸ்கேட்டிங்

முற்றும்!

Read More General Knowledge Posts :

Read : இலங்கையில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுரிமைகள் தொடர்பான பொது அறிவுத்தகவல்கள்

Read : இலங்கை அரசின் கெளரவ விருதுகள் பற்றிய பொது அறிவுத்தகவல்கள்

Advertisement