இலங்கை அரசின் கெளரவ விருதுகள் பற்றிய பொது அறிவுத்தகவல்கள்

Advertisement
Continue Reading Below

இலங்கையில் தேசிய கெளரவ விருதுகள் வழங்கும் முறை 1981 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விருது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றது. இக் கெளரவ நிலைகளையும், விருதுகளையும் ஜனாதிபதி அலுவலகம் நிர்வகிப்பதுடன் பொறுப்பும் கூறுகின்றது. இலங்கை நாட்டுக்காக உன்னத சேவையாற்றியவர்களுக்கே இவ்விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகின்றது. இலங்கை அரசின் தேசிய கெளரவ விருதுக்கு உரித்துடையவர்களின் பெயர் அரசாங்க வர்த்தமானியில் வெளிவரும்.

தேசிய கெளரவ நிலைகள் மற்றும் விருதுகளின் ஒழுங்குமுறை

ஸ்ரீலங்காபிமான்ய | Sri Lankabhimanya | ශ්‍රී ලංකාභිමාන්‍ය : இலங்கை அரசினால் வழங்கப்படும் விருதுகளில் இதுவே அதி உயர் நிலை விருதாகும். இலங்கை தேசத்துக்காக அளப்பரிய சேவை செய்தவர்களுக்காக வழங்கப்படும். உயிருடன் இருக்கும் காலமோ அல்லது இறப்பிற்கு பின்னரோ இவ்விருது வழங்கப்படலாம். சமகாலத்தில் ஐந்து பேர்களுக்கு மாத்திரமே ஒரே நேரத்தில் இவ்விருதை கொண்டிருக்க முடியும். “ஸ்ரீலங்காபிமான்ய “ எனும் சிங்கள வாசகம் தமிழில் “இலங்கையின் பெருமை” எனும் பொருளை தருகிறது.

தேசமான்ய | Deshamanya | දේශමාන්‍ය : தாய் நாட்டிற்காக மதிப்பற்ற சேவை புரிந்த குடிமக்களுக்கே இவ்விருது வழங்கப்படுகின்றது. இலங்கை அரசினால் வழங்கப்படும் இரண்டாவது உயர் கெளரவ விருது இதுவாகும். தேசமான்ய எனும் சிங்கள வாசகத்திற்கு தமிழில் ”நாட்டின் பெருமை” என பொருள்.

தேசபந்து | Deshabandu | දේශබන්දු : ஸ்ரீலங்காபிமான்ய மற்றும் தேசமான்ய ஆகிய இரண்டு விருதுகளுக்கும் அடுத்து வரும் மூன்றாவது அதி உயர் விருது இதுவாகும்.

ஸ்ரீலங்கா சிகாமணி | Sri Lanka Sikhamani | ශ්‍රී ලංකා ශිඛාමනී : For service to the nation.

ஸ்ரீலங்கா திலக | Sri Lanka Thilaka | ශ්‍රී ලංකා තිලක : For service to the nation

வீர தீர செயல்களுக்காக கொடுக்கப்படும் விருதுகள்

வீரசூடாமணி – For acts of bravery of the highest order.

வீரபிரதாப – For acts of bravery of the highest order.

இலங்கையர் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் கெளரவ விருதுகள்.

ஸ்ரீலங்கா மித்ர விபூஷன – இலங்கை குடிமக்களுடன் கொண்ட நட்புறவையும், ஒத்துழைப்பையும் பாராட்டி கெளரவிக்கும் முகமாக வெளிநாட்டு தேசமொன்றின் தலைவருக்கு வழங்கப்படும் கெளரவ விருதாகும். (For Heads of State and Heads of Government). இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் இவ்விருது 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா ரத்ன – இலங்கை மற்றும் பொதுவாக மனித குலத்திற்காக மேற்கொண்ட உன்னதமான சேவைகளை பாராட்டி இலங்கை பிரஜையல்லாதோருக்காக வழங்கப்படும். இது இலங்கையல்லாதோருக்கு இந்நாட்டில் வழங்கப்படும் அதி உயர் விருதாகும்.

ஸ்ரீலங்கா ரன்ஜன –  For distinguished service of highly meritorious nature. இலங்கையர் அல்லாத பிற நாட்டு குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படும் இரண்டாவது அதி உயர் கெளரவ விருதாகும்.

ஸ்ரீலங்கா ரம்யா – For distinguished service

அறிவியல் துறையில் ஆற்றிய உன்னத சாதனைகளுக்காக வழங்கப்படும் விருதுகள்

வித்யா ஜோதி – For outstanding scientific and technological achievements

வித்யா நிதி – For meritorious scientific and technological achievements

கலை, கலாச்சாரம் மற்றும் நாடகம் ஆகிய துறைகளின் சாதனைகளுக்காக

கலா கீர்த்தி – For extra ordinary achievements and contributions in arts and drama

கலா சூரி – For special contribution to the development of the arts.

இலங்கையில் வழங்கப்படும் மேலதிக சில விருதுகள்.

Gratiaen (கிரேஷன்) விருது – இலங்கையை பிறப்பிடமாக கோண்ட ஆங்கில இலக்கிய எழுத்தாளர்களை கெளரவிப்பதற்காக வழங்கப்படும் விருதாகும். இது 1992 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

சேவா விபூஷன விருது – 25 வருடங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியுள்ள மற்றும் சிறந்த நடத்தைமிக்க இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த நிரந்தர படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர்களது சேவையைப் பாராட்டி வழங்கப்படும் விருதாகும்

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *