நோபல் பரிசு பற்றிய பொது அறிவு

நோபல் பரிசு பொது அறிவு
Advertisement
Continue Reading Below

நோபல் விருதுகள்

உலகின் டைனமைட் கண்டுபிடிப்பாளரான சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவாகவே 1901 ஆம் ஆண்டு முதல் வருடந்தோரும் அமைதி, வேதியியல், இயற்பியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றிற்காக இவ்விருது வழங்கப்படுகிறது. பொருளியலுக்கான நோபல் பரிசு 1968 இல் ஸ்வீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் விருதில் பரிசு பெறும் ஒவ்வொருவரும் ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் வழங்கி கெளரவிக்கப்படுவார்கள்.

சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமலும் போவதுண்டு. 1914,1918,1935,1940,1941,1942,1943 போன்ற வருடங்களில் நோபல் பரிசு வழங்கப்படாத போதும் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும்.

இறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படமாட்டாது. எனினும் பரிசுக்கான வெற்றியாளர் அறிவித்த பின்பு அதை பெறுவதற்கு முன்னர் பரிசினை பெறவேண்டியவர் இறந்துவிட்டால் அவருக்கு அப்பரிசு வழங்கப்படும். பொதுவாக நோபல் பரிசு திரும்பப்பெறத்தக்கதல்ல.

  • நோபல் பரிசு வழங்கப்படாத முக்கியமான துறை – கணிதம்
  • 1925 இல் இலக்கியத்திற்கான நோபல் விருதையும் 1938 இல் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை பெற்ற ஒரே நபர் – ஜோஜ் பெர்னாட்ஷா
  • நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சேர் C.V ராமன் (1930 – இயற்பியல்)
  • நோபல் பரிசு பெற்ற ஆசியாவின் முதல் நபர் – இரவீந்திரநாத் தாகூர்( இலக்கியம் – 1913)
  • குறைந்த வயதில் நோபல் பரிசை வென்றவர் – மலாலா யூசப்சையி ( 2014 ஆம் ஆண்டு 17 வயதில் அமைதிக்கான நோபல்)
  • அதிக நோபல் பரிசினை பெற்ற நாடு – ஜேர்மனி
  • இரண்டு தடவைகள் நோபல் பரிசினை பெற்ற முதல் மனிதர் மற்றும் பெண்மனி – மேரி கியூரி(1903,1911 ஆண்டுகளில்)
  • ஆசியாக் கண்டத்தில் நோபல் பரிசு பெற்ற பெண்மனிகள் – அன்னை தெரேசா(இந்தியா), ஆங்சாங்சூசி(மியன்மார்), மலாலா யூசப்சையி(பாகிஸ்தான்)
  • நோபல் பரிசை பெற்ற தமிழர்கள் – C.V ராமன்(1930), சுப்பிரமணியன் சந்திரசேகர்(1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(2009)
  • நோபல் பரிசை வென்ற குடும்பம் – மேரிகியூரியின் குடும்பம்
  • ஏழைகளின் வறுமையை ஒழித்ததற்காக பொருளாதாரத்துறையில் பரிசு பெறாமல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தெற்காசியத்தவர் – முகம்மட் யூனுஸ்(2006 ஆம் ஆண்டு, நாடு – பங்கலாதேஷ்)
  • அமைதிக்கன நோபல் பரிசு வழங்கப்படுவதை சிபாரிசு செய்யும் பாராளுமன்றம் – நோர்வே பாராளுமன்றம்
  • கணிதத் துறையில் நோபல் பரிசாக கருதப்படும் விருது – ஃபீல்ட்ஸ் மெடல்(The Fields Medal)
  • ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படுவது – மக்கேச விருது (The Ramon Magsaysay Award)

முதன் முதலில் ஒவ்வொரு துறையிலும் நோபெல் பரிசு பெற்றவர்களின் விபரம்

முற்றும்!

Read More General Knowledge Posts :

Read : இலங்கையில் உள்ள யுனெஸ்கோ உலக மரபுரிமைகள் தொடர்பான பொது அறிவுத்தகவல்கள்

Read : இலங்கை அரசின் கெளரவ விருதுகள் பற்றிய பொது அறிவுத்தகவல்கள்

Read : இலங்கையின் தபால் சேவை பற்றிய பொது அறிவுத்தகவல்கள்

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *