இலங்கையின் தபால் சேவை பற்றிய பொது அறிவுத்தகவல்கள்

Postal Service SriLanka
Advertisement
Continue Reading Below

போர்த்துக்கேயரின் காலத்திலோ அல்லது ஒல்லாந்தரின் காலத்திலோ தபால் சேவை தொடர்பில் குறிப்பிட்டு சொல்லும் படியான அபிவிருத்தியோ வளர்ச்சியோ காணப்படவில்லை. இலங்கையில் ஆங்கிலேயரின் காலத்திலே தபால் துறையில் பெரும் புரட்சிகரமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.

1882 இல் தபால் திணைக்களம் அல்லது இலங்கைத் தபால் உருவாக்கப்பட்டது . முதலாவது பிரித்தானியா தபால் மா அதிபராக 1815 இல் ஏ. கெனடி நியமிக்கப்பட்டார். 1832 இல் ஆசியாவிலே முதலாவது குதிரை வண்டி தபால் சேவை இலங்கையிலே ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இது 1838 ஆம் ஆண்டு கொழும்புக்கும் காலிக்கும் இடையில் விஸ்தரிக்கப்பட்டது. இலங்கையில் புகையிரத சேவை வந்ததன் பிற்பாடு 1865 ஆம் ஆண்டு முதலாவது தபால் புகையிரத சேவை கொழும்பு – அம்பேபுஸ்ஸ நகரங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டது. 1857.04.01 இல் இலங்கையின் முதலாவது முத்திரை வெளியிடப்பட்டது. 1877 ஆம் ஆண்டு உலக தபால் ஒன்றியத்தில் இலங்கை இணைந்தது.

1815 – கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களில் முதல் கட்டமாக அஞ்சல் அலுவலகங்கள் அமைக்கப்படல்

1832 – ஆசியாவிலே குதிரை வண்டி மூலமான முதலாவது தபால் சேவை கொழும்பு கண்டி நகரங்களுக்கிடையில் ஆரம்பமாதல்

1838 – கொழும்பு மற்றும் காலி நகரங்களுக்கிடையில் தபால் சேவை விஸ்தரிக்கப்படல்

1850 – பழக்கப்பட்ட புறாக்கள் மூலம் கொழும்பு மற்றும் காலிக்கிடையில் தபால் சேவை ஆரம்பிக்கப்படல்

1865 – இலங்கையில் முதலாவது தபால் புகையிரத சேவை கொழும்பு அம்பேபுஸ்ஸ ஆகிய நகரங்களுக்கிடையில் ஆரம்பமாதல்

1872 – ஆகஸ்ட் 22 ஆம் திகதி முதலாவது தபால் அட்டை வெளியிடப்படல்

1873 – கொழும்புக்கும் இங்குலாந்திற்கும் இடையில் காசுக் கட்டளை சேவை ஆரம்பமாதல்

1877 – உள்நாட்டு காசுக் கட்டளை சேவை ஆரம்பிக்கப்படல்

1880 – இலங்கை இந்தியாவுக்கிடையில் காசுக்கட்டளை சேவை அரம்பிக்கப்படல்

1895 – கொழும்பில் பிரதம அஞ்சல் அலுவலகம் திறந்துவைக்கப்படல்

1947 – இலங்கையைச் சேர்ந்த N.M Perera அவர்கள் அஞ்சல் அதிபதியாக நியமனம் பெற்றார்

1949 – கொழும்பு யாழ்ப்பாணத்திற்கு இடையிலான வான் அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்படல்

1967 – ஜனவரி முதலாம் திகதி இலங்கை முத்திரை பணியகம் ஆரம்பிக்கப்படல்

இன்றும் கூட உலகில் இருக்கும் ஏனைய நாடுகளின் தபால் சேவைகளுடன் ஒப்பிடும் போது இலங்கை தபால் சேவை மிகவும் முன்னிலையில் இருக்கக்கூடிய அதி சிறந்த சேவை வழங்கும் தபால் சேவையாக கருதப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் சர்வதேச ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச அஞ்சல் செயற்பாடு மதிப்பீட்டின் படி இலங்கை அஞ்சல் சேவைக்கு தர முகாமைத்துவத்திற்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில் வருடாந்தம் அண்ணளவாக நபரொருவருக்கு 16 கடிதங்கள் கிடைக்கின்றன. ஒரு தபால் அலுவலகம் 4332 மக்களுக்கு சேவையாற்றுகின்றது. ஒவ்வொரு தபால் அலுவலகத்தின் மூலமும் சேவையாற்றப்படுகின்ற நிலப்பகுதி 13 சதுர கிலோமீற்றர் ஆகும்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *